Pages

23 May, 2010

முதுகு தண்டு ஜவ்வு விலகல்-- வர்மா சிகிச்சையின் மூலம் நிவாரணம்

அறிமுக முன்னோட்டம் :-
 
முதுகு தண்டு ஜவ்வு  விலகலை ஆங்கிலத்தில் டிஸ்க் ப்ரோலாப்ஸ்  (அ)  ஸ்போன்டிலோலிஸ்தேசிஸ் என்று விளிப்பர். 33 எலும்புகள் கூடிய பகுதியை தான் முதுகு தண்டு என அறிகின்றோம்.

ஒவ்வொரு எழும்பின்  நடுவிலும் ஜெல்லி போன்ற பசை கொண்ட ஒரு திரவம் (அன்னுளுஸ் புல்போசிஸ்  ) காணப்படும். இத்திரவத்தினை சுற்றி பாதுகாப்பு அரணாக அன்னுளுஸ் பிப்ரோசிஸ் எனும் ஜவ்வு போன்ற கடினமான ஒரு அமைப்பு எலும்பின் மேல் பதிந்தவாறு  காணப்படும்.

இத்தகைய கடினமான அமைப்புள்ள ஜவ்வானது, கிழிந்து,  எலும்பின் மேல் உள்ள தனது பிடிமானத்தை இழக்க கூடிய சந்தர்ப்பத்தில் அன்னுளுஸ் புல்போசிஸ் எனும் திரவமானது அந்த கிழிசலின் வழியாக வெளியேறி, வெர்டிப்ரா எனப்படுகின்ற தண்டு வட எழும்பின் இரு புறங்களிலும்,  காணத்தக்க ஸயாடிக் நெர்வ் எனும் நரம்பு  மண்டலத்தை இடிக்கும் . இந்த திரவம் சிறிது கால கட்டத்திற்கு பின் காய்ந்து தரவ நிலையிலிருந்து  மாறி கெட்டியாகி விடும்.

ஸயாடிக் நெர்வ் எனப்படுகின்ற நரம்பு மண்டலம் மேழிருந்து கீழாக இறங்கி இடுப்பு,  புட்டம் , தொடை , கண்டஞ்சதை வழியாக பாதத்தின் விரல் நுனிகள் வரை செல்லுகின்றது .

இவ்வாறு செல்லத்தக்க  இந்த நரம்பு மண்டலத்தை, ஜவ்வு விழகியதால் வெளி வந்த, கெட்டியாக மாறிய திரவம் இடிக்க, சில  ரசாயன  மாற்றங்கள் அவ்விடத்திலே நிகழ்ந்து பெரும் துயரம் தரும் வலியினை, நடு முதுகில்,  உண்டாக்குகின்றது. 


அங்ஙனம் நடு முதுகில் தோன்றிய வழியானது,தகுந்த நேரத்தில் மருத்துவம் செய்யாத பட்சத்தில்,  நாட்பட நாட்பட அதிகமாகி ,   மேழிருந்து கீழாக இறங்கி இடுப்பு,  புட்டம் , தொடை , கண்டஞ்சதை வழியாக பாதத்தின் விரல் நுனிகள் வரை வலியினை கொண்டு செல்கின்றது. இத்தகைய தன்மை வாய்ந்த வலியினையே  "ஸயாடிக் பெயின்" என்று அங்கிலத்திலும் "கீழ்வாதம்" என்று தமிழிலும் விழிப்பர்.


ஜவ்வு விலகலுக்கான காரணிகள் :-


*மிகுந்த அயற்சி தரும் கடின வேலைகளை செய்தல்
* அதிக நேரம் உட்கார்ந்து வேலைப் பார்த்தல் 
*அளவுக்கு அதிகமான பாரம் உள்ள பொருட்களை குனிந்து  தூக்குதல் போன்ற காரணங்களினால்  முதிகில் உள்ள அழுத்த நிலை குறைந்து ஜவ்வு பிசகி பல்போசஸ் விலகும்.
ஜவ்வு விலகக் கூடிய பொதுவான இடங்கள் :-


* CERVICAL (செர்விகல் ) எனும் கழுத்து பகுதி
* தொரசிக் (தொராசிக் ) எனும் நெஞ்சுக் கூட்டுப்  பகுதி
* LUMBAR (லம்பார்) எனும் கீழ் முதுகு (அ) இடுப்புப் பகுதி.
ஜவ்வு விலகலினால் ஏற்படக்கொடிய அறிகுறிகள் :-
                  
                     * மிதமான (அ) மிகுதியான கழுத்து (அ) முதுகு வலி

* சில சமயம் முதுகு வேதனை தவிர்த்த முழங்கால் (அ)                    கணுக்கால் (அ) பாதத்தில் வேதனை
* உணர்ச்சி சம்பந்தமான குறிகள் , அதாவது மரத்தல், எரிச்சல், தசைத்தளர்ச்சி  முதலானவை 
* தசைப்பிடிப்பு, 
* முதுகிலிருந்து கால் பாதம் வரை மிகுந்த வேதனை
* நடக்கையில் முழங்கால் பலம் இல்லாது மடங்கி விடுவது போன்ற உணர்வு
* தலை சுற்றல் , நெஞ்சு படபடப்பு , மார் வலி , தோள் பட்டை வலி , முழங்கை மற்றும் கை விரல்கள் வலி போன்றவை கழுத்தில் ஜவ்வு விலகும் பட்சத்தில் ஏற்படக்கூடிய குறிகள் 
* விலா எழும்பில் வலி அல்லது பிடிப்பு ,இடுப்பு பிடிப்பு போன்றவை நெஞ்சுக் கூட்டுப்  பகுதியில் ஜவ்வு விலகும் பட்சத்தில் ஏற்படக்கூடிய குறிகள்  .
ஆயுர்வேதத்தில் ஜவ்வு விலகலுக்கான மருத்துவ முறை :-


எங்களது மருத்துவ நிலையமான  சரோஜா பஞ்சகர்மா & வர்மா சிகித்சா  சென்டர் -ல் (S.P.K.V.C.C) மர்ம சிகித்சா எனும் வர்மா சிகித்சையுடன் சுஷும்னாவஸ்தி எனும் மரபு மிக்க சிகித்சை முறைகளால் பாதிக்கப்பட்ட தண்டு வடம் உள்ள பகுதிகளில் எங்களது மருத்துவர் திரு . மரு(Dr) .  ரங்க பிரசாத் பட் (முந்நாள் பேராசிரியர்), அவர்களால் மேற்  கொள்ளப்படுகின்றது .
15 நாட்கள் செய்யப்படும் அம்மருத்துவ முறைகளுக்கு பின்னர் முது வலி நன்றாக குணம் அடைகின்றது .
ஏனைய ஆயுர்வேத மருத்துவ முறைகளாகிய பிழிச்சில் , க்ரீவாவஸ்தி , இலைக்கிழி, நவரக்கிழி போன்றவற்றினாலும் அவற்றில் பேதம்  உண்டாகின்றது .

"வைய்யகத்தோர் நோயற்ற வாழ்வு வாழியவே "
- Dr.Prof.A.Rangaprasad Bhat,SPKVCC,,Mylapore,Chennai.Mob:- 9841218802
 "Let humanity live in peace and health".
“Sarve Janaah Sukhinoh Bhavanthuh ”.
"सर्वे जनाः सुखिनो: भवन्तु:"
"ಸರ್ವೇ ಜನಾಃ ಸುಖಿನೋ: ಭವಂತು:"
"வாழ்க நலமுடன்".    

-Prof.Dr.Rangaprasad Bhat.




















No comments: