Calcaneal Spur என்றால் என்ன ?
குதி கால் எலும்பின் உள் (Calcaneum bone) இருந்து ஒரு கூரிய முள் போன்ற (அ) மொக்கையான பாகம் முளை விடும்.
இந்த முளையினையே குதி முள் (அ) Calcaneal spur என ஆங்கிலத்தில் அழைப்பர்.
எலும்பிலிருந்து முளை விடும் இந்த குதிமுள்ளானது அதன் அடியிலோ, பக்க வாட்டிலோ உள்ள ஜவ்வுகள்(ligaments) , தசை நாண்கள் (tendons), நரம்புகள் (nerves) பன்ற மென்திசுக்களை உராய்கையிலோ,அழுத்துகையிலோ அவ்விடத்தில் வலியினை உண்டாக்குகின்றது.
குதி முள் தோன்ற காரணம் என்ன ?
குதிமுள்ளானது, நமது உடலில் ஏற்படும் பழுதினை இயற்கையாக சீரமைக்கையில தோன்றுகின்றது. இறைவன், தேய்மானம் ஏற்படும் எலும்பின் பகுதியில் அதை சீரமைக்க புத்தம் புதிய எழும்பு திசுக்களை "எழும்பு விளைவி"(Osteophytes) மூலமாக ஈடேற்றுகிறார். அவ்வாறு தோன்றும் புதிய திசுக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து முளை போன்ற முள்ளின் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.
பலவந்தமாக மற்றும் அயர்ச்சி தரக்கூடிய செய்கைகளான நடனம், ஓடுதல் போன்ற காரணிகளால் பின்னங்குதிகால் தசை நாற் பட்டையானது (Plantar fascia) இறுக்கம் பெற்று, தான் ஒட்டிகொண்டிருக்கும் குடி கால் எழும்பின் மீது அழுத்தம் ஏற்படுத்தி, அவ்விடத்தில் முள் உண்டாக காரணியாகின்றது. மற்றும் அதிக உடல் எடை, காலின் அளவை விட சிறிய மூடு காலணிகளை (shoes) அணிதல் போன்றவற்றாலும் மேற்கூறிய அழுத்தம் குடி எலும்பின் மேல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.
உதாரணத்திற்கு, ஓட்டம்; நடனம் போன்ற காரணிகளால், பாதத்தின் நீண்ட
தசை நாற் பட்டையாகிய, பின்னங்குதிகால் தசை நாற் பட்டை (Plantar fascia)அழுத்தம் பெற்று, குதி காலின் மேல் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி அத்தசை நாற் பட்டை வீக்கம்முறச் செய்கிறது (Plantar fascitis). மேற்சொன்ன வீக்கத்தை தாக்கு பிடிக்க வேண்டி, எலும்பும் அதற்கேற்றார் போல் தன்னை செதுக்க முற்படுவதால், அவ்விடத்தில் முள் தோன்றுகிறது.
இறுக்கமான மூடு காலணிகளை (shoes) அணிவதால் பின்னங்காலில் முள்(back of the heel) தோன்றுகிறது.
நோயின் குறிகள் :-
* குதி கால் வீக்கம்
* கிழித்தல் போன்ற அதி தீவிரமான வலி
* காலை ஊன்றுவதில் சிரமம்
* சிறிது ஹூரம் நடந்து சென்ற பின், வலியில் தொய்வு .
* சிற் சில அல்லது பற்பல சமயங்களில் வலியானது குதிகாலில் இருந்து மேல்நோக்கி கணுக்கால் மற்றும் கண்டஞ்சதை வரையில் ஏற்முகமாக இருக்கப் பெறலாம்.
* சிற் சில அல்லது பற்பல சமயங்களில் வீக்கமானது குதிகாலில் இருந்து மேல்நோக்கி கணுக்கால்வரையில் பரவலாம் ..
* சிலரில் வலியில் இருந்து பேண, குதி முள்ளின் அடியில் திசுக்கள் கூடி மெத்தை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த முயலலாம். நாளடைவில் அத்திசுக்களே காலில் ஆணியை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது ..!
இந்நோயை எங்ஙனம் பகுப்பாய்வது (அ) அறிவது ?
ஊடு கதிர் நிழற்படம் (X-Ray) வாயிலாக குதி முள் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்துகொள்ளமுடியும் . காண்க கீழுள்ள படம் ..
ஆயுர்வேதத்தில் இதற்கு தீர்வு உண்டா?
மேற்கூறிய விளக்கங்கள் யாவும் பரங்கி மருத்துவமாகிய நவீன மருத்துவம் சார்ந்தவையாக இருப்பினும், ஆயுவேடத்தில் இவ்வியாதியை "வாத கண்ட்டகம்" என்று பல்லாயிரம் ஆண்டுகள்ளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தில் வலி உள்ள மக்களில் வலி நிவாரணி என்று கொடுப்பது வழக்கமில்லை.
"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்" எனும் வள்ளுவரின் கூற்றிற்கு இணங்க, எமது மருத்துவ எண்ணக்கரு அல்லது கருத்து ஆய்வுகளின் படி ''வாத தோடத்தின்'' இயற்கையான் இருப்பிடமான எலும்பில் வீறுகொண்டும்; சூறாவளி போல் சீறுகொண்டும் அவ்விடத்தே எலும்பின் இயல்பான தோற்றத்தில் பதிப்பை உண்டாக்கும் அந்த வீறுகொண்ட வாத தோஷத்தினை, அடக்கி ஆளுகின்ற தன்மையுள்ள மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம்; மாத்திரை உண்டானவற்றை கொண்டு துயரம் தரக்கூடிய குதிகால் வலியிலிருந்து விடுதலை பெற ஆவன செய்கின்றோம்.
குல்குலு ,
சிற்றரத்தை,
ஓமம்,
வாட நாராயணி இலை,
முடக்கத்தான் போன்றவை சில வகையான தேக பிரக்ருதி உடையோரில் பலன் தரும்.
எருக்கன் இலையை, சூடு செய்த செங்கல்லின்செங்கல்லின் மீது வைத்து, அதன் மேல் பாதிக்கப்பட்ட குதி காலினை வைக்க, தற்காலிகமாக வேதனையில் இருந்து தப்பலாம் .
எங்களது மருத்துவகூடத்தில், இவ்வகை குதிகால் வலியுள்ளவர்க்கு, பிரத்யேகமான சிகிச்சை செய்கின்றோம். அதாவது , பாதிக்கப்பட்ட குதி காலின் மீது ஒரு சிறிய பாத்தி போன்று உளுந்து மாவினால் கட்டி, அடஹ்ன் நடுவில், எண்ணையை ஊற்றி, பின்னர் குறிப்பிட்ட பதத்தில், வலியின் தன்மைக்கு எற்றவாறு, சூடு எண்ணையினை அதன் மேல் ஊற்றி, குதி கால் வலி மற்றும் வீக்கத்தினை, விரைவில் கட்டுக்குள் கொண்டு வருகின்றோம். மேற்கூறிய சீரிய முறையினால் பலன் அடைந்தோர் பலர்.
வாழ்க வையகம் ..
அனைவரும் நோயற்று வாழியவே ...
சென்னை, மயிலாப்பூர்.
நேர்முக மருத்துவ ஆலோசனைக்கு,
நடை பேசி : 9841218802 (முன் நியமனம் பெற )
மின்னஞ்சல் :-drrangaprasadbhat@gmail.com
1 comment:
sir, great post, lot of new technical tamil words are employed..keep updating sir..
Post a Comment